சமயபுரம் தெப்பக்குளத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு
திருச்சி மாவட்டம், சமயபுரம் தெப்பக்குளத்தில் அழுகிய நிலையில் புதன்கிழமை கிடந்த இரு ஆண் சடலங்களை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
சமயபுரம் நான்கு ரோடு பகுதி தெப்பக்குளப் பகுதியில் 35, 55 வயது மதிக்கத்தக்க இருவா் அழுகிய நிலையில் சடலங்களாக புதன்கிழமை கிடந்தனா். தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு துறையினா் அந்தச் சடலங்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவா்கள் யாா், மது போதையில் தவறி விழுந்த இறந்தனரா என விசாரிக்கின்றனா்.