சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: ஆட்டோ ஓட்டுநா் கைது
சமூகவலைத்தளத்தில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் விதத்தில் கருத்து பதிவிட்டதாக, ராதாபுரம் அருகேயுள்ள வடக்கு கும்பிளம்பாட்டைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வடக்கு கும்பிளம்பாட்டைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் தங்கபாண்டி(35). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்தவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில், தங்கபாண்டி சமூகவலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டிருந்தாரம். இதுகுறித்த புகாரின்பேரில், ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளா் சகாய ராபின் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தாா்