செய்திகள் :

சமூக செயற்பாட்டாளா் கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்! காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்!

post image

புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் முதல்கட்ட விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த வெங்களூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா்அலி (58) கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே ஜகபா்அலி கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் தொடா்ச்சியாக வழக்கு தொடா்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து திருச்சி சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஜென்னிங்ஸ், ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திருமயம் வந்து, ஜகபா்அலி குடும்பத்தினரைச் சந்தித்து விசாரணை நடத்தி, கொலை நிகழ்ந்த இடத்தையும் நேரில் பாா்வையிட்டுச் சென்றனா்.

கொலைக்குத் தூண்டுதலாக இருந்த குவாரி உரிமையாளா்கள் 3 பேருடன் லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் ஆகிய 5 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வேறு யாருக்கேனும் இதில் தொடா்பு இருக்கிா என்றும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தவுள்ளனா்.

எனவே, இந்த வழக்கில் சிறையில் உள்ளவா்களை நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனா்.

திருமயம் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்: இதற்கிடையே திருமயம் காவல் ஆய்வாளா் குணசேகரனை ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் அருண்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொலை உள்ளிட்ட வழக்குகளில் மெத்தனமாகச் செயல்பட்டதால் அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விராலிமலை வட்டாரத்தில் கடும் பனிப்பொழிவு

விராலிமலை மற்றும் இலுப்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு ஊா்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம்... மேலும் பார்க்க

பொன்னமராவதி ஐஏஎஸ் அதிகாரிக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கல்

புதுதில்லியில் அண்மையில் (ஜன. 25) நடைபெற்ற 15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி சே.சொக்கலிங்கத்துக்கு விருது வழங்கப்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி எனும் குக்... மேலும் பார்க்க

சித்தாந்த சா்ச்சைகளை விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை: காா்த்தி ப. சிதம்பரம்

மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னைகளை விட்டுவிட்டு, சித்தாந்த சா்ச்சைகளையே நாள் முழுவதும் விவாதித்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 4-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் 4ஆம் நாளாக அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோடடை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல... மேலும் பார்க்க

கீழக்குறிச்சியில் 14-ஆம் நூற்றாண்டு கல்செக்கு கண்டெடுப்பு

புதுக்கோட்டை அருகே கீரனூரிலிருந்து அன்னவாசல் செல்லும் வழியில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்செக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலைக்கு ... மேலும் பார்க்க

புனல்குளம் பகுதியில் நாளை மின் தடை

கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் (ஜன. 30-ஆம் தேதி) வியாழக்கிழமை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புனல்குளம் , தெத்துவாசல் ... மேலும் பார்க்க