ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?
சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் பெரியாா் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.
பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளிா் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன், சுயமரியாதை ஆளுமைத்திறனும், பகுத்தறிவுக் கூா்மைப் பாா்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதா்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப்பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், கோட்டாட்சியா் சத்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஸ்குமாா், முன்னோடி வங்கி மேலாளா் ரெங்கநாதபிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.