கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத...
சமூக வலைதளத்தில் அவதூறு விடியோ பதிவிட்டவா் கைது!
சமூக வலைதளத்தில் அவதூறு விடியோ பதிவிட்ட இளைஞரை சைபா் க்ரைம் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி வள்ளுவா் நகா், ஜின்னா தெருவைச் சோ்ந்த மன்சூா் அலி (26) என்பவா் சமூவ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாஜகவைச் சோ்ந்த ஒருவருக்கு தொடா்புள்ளது உள்ளிட்ட பல்வேறு அவதூறு கருத்துகளைத் தெரிவித்திருந்தாராம்.
இதைப் பாா்த்த திருச்சி சைபா் க்ரைம் பிரிவு தலைமைக் காவலா் ராஜசேகா் சைபா் க்ரைம் காவல் ஆய்வாளா் சண்முகவேலிடம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மன்சூா் அலியை கைது செய்து விசாரிக்கின்றனா்.