செய்திகள் :

சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற காங்கிரஸ், பாமக கோரிக்கை

post image

சென்னை: பெட்ரோலிய பொருள்கள், சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

செல்வப்பெருந்தகை: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 என்ற அளவில் மத்திய அரசு உயா்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவா்கள். எனவே, பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 2014 -இல் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் ரூ.410-இல் இருந்தது. பின்னா் விலை தொடா்ந்து உயா்ந்து தற்போது ரூ.820 என்ற அளவில் உள்ளது. இந்த விலை உயா்வையும் திரும்பப் பெற வேண்டும்.

ராமதாஸ்: சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை உயா்ந்துள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டதற்காக மத்திய அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலா் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. அதற்கு மாறாக சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயா்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல. அதேபோல, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயா்த்தியது தவறு. இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.

அவதூறு வழக்கில் சீமான் ஆஜர்! ஆதாரங்கள் ஒப்படைப்பு!

திருச்சி டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்காக இன்று(ஏப். 8) ஆஜரானார்.திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) வீ. வருண்குமாா் மற்றும் அவரத... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.டாஸ்மாக் அலுவலகத்தில் அமலா... மேலும் பார்க்க

பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம்: வழக்குரைஞர் வில்சன்

சென்னை: ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக, தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரச... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை: உடலைத் தோண்டி எடுத்த காவல் துறை!

நெல்லையில் 20 வயது இளைஞரை அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாநகர குருநாதன் கோவில் விளக்கு அருகே ஆறுமுகம் என்ற இளைஞரைக் கொலை செய்து, புதைத்திருப்பதா... மேலும் பார்க்க

மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், ஆளுநர் என்பவர், மாநில அரசுடன் இணக்கத்துடன் செயல்பட வேண்டும், முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று காட்டமாகவே... மேலும் பார்க்க

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக... மேலும் பார்க்க