சம்பல் வன்முறை: இதுவரை 47பேர் கைது!
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், வன்முறை தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக 91 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா தெரிவித்தார்.