சம்பள பிரச்னை, தொழிலாளர்கள் மீது கோபம்... பஸ்சிற்கு தீவைத்தவிட்டு நாடகமாடிய ஓட்டுநர்; நடந்தது என்ன?
புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹின்சேவாடி பகுதியில் தனியார் கம்பெனி தொழிலாளர்களை கம்பெனிக்கு ஏற்றிச்சென்ற மினி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்தில் பஸ்சின் பின் கதவு திறக்காமல் போனதால் பஸ்சிலிருந்து தொழிலாளர்களால் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தீ விபத்தில் சிக்கி 4 பேர் இறந்து போனார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் தனது இருக்கையிலிருந்து கீழே குதித்துவிட்டார். முதலில் டிரைவரின் இருக்கைக்குக் கீழேதான் தீப்பிடித்துக்கொண்டது. இத்தீவிபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பல சந்தேகப்படும்படியான பொருட்கள் பஸ்சில் கண்டுபிடிக்கப்பட்டது. தீப்பெட்டி ஒன்றும் பஸ்சில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பஸ் டிரைவர் தனது உடம்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அளவுக்கு அதிகமாக நடித்தது போன்று இருந்தது. இது போன்ற காரணங்களால் போலீஸார் பஸ் டிரைவர் ஜனார்த்தனிடம் விசாரித்தனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. டிரைவர்தான் பஸ்சிற்கு திட்டமிட்டு தீ வைத்தது தெரிய வந்தது. தீபாவளி நேரத்தில் கம்பெனியில் மற்ற ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற போனஸ் கொடுக்காத காரணத்தால் ஜனார்த்தன் கோபத்திலிருந்தார். அதோடு அவர் வேலை செய்த கம்பெனி ஊழியர்கள் டிரைவரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டிருந்தனர். டிரைவரை காலை நேரத்தில் சரியான நேரம் சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர்.
நீரிழிவு நோயாளியான ஜனார்த்தன் இதனால் கம்பெனி ஊழியர்கள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அதோடு கம்பெனி ஊழியர்கள் டிரைவரிடம் மற்ற வேலைகளைச் செய்யச் சொல்லி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது போன்ற காரணங்களால் கம்பெனி ஊழியர்கள் மீது ஜனார்த்தன் கடும் கோபத்தில் இருந்தார். இதனால்தான் திட்டமிட்டு எரியக்கூடிய திரவத்தை கம்பெனியில் இருந்து எடுத்து முன்கூட்டியே பஸ்சில் வைத்துக்கொண்டார்.

அதோடு ஒரு இடத்தில் டிரைவர் பஸ்சிற்கு தீயைப் பற்ற வைத்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கம்பெனி வாசலுக்கு முன்புதான் பஸ்சிற்கு தீ வைக்க ஆரம்பத்தில் ஜனார்த்தன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு சற்று முன்கூட்டியே தீ வைத்துவிட்டார். டிரைவரை கைது செய்து அவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks