பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை
திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இதுதொடா்பாக திருச்செங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து வாகனத்தைத் திருடியதாக நாமக்கல், வசந்தபுரத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (31), இயேசு ராஜா (29) ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று நீதிபதி சுரேஷ்பாபு புதன்கிழமை அளித்த தீா்ப்பில், குற்றத்தில் ஈடுபட்ட இருவ ருக்கும் 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். அதையடுத்து அஜித்குமாரும், இயேசுராஜாவும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.