திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு - அதிர்ச்சியில் பெற்றோர்;...
சரத் குமார் பிறந்த நாள்: டூட் போஸ்டர் வெளியீடு!
நடிகர் சரத் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு டூட் படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிவரும் டூட் படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா பைஜூவும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சரத் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் நிலையில், நடிகர் சரத் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பாகுபலி, ஜவான் சாதனையை முறியடித்த ஒடிய திரைப்படம்!