சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!
வாரத்தின் முதல் நாளான இன்று (பிப். 10) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,789.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11. 30 மணியளவில், சென்செக்ஸ் 539.15 புள்ளிகள் குறைந்து 77,321.04 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக 600 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 166.25 புள்ளிகள் குறைந்து 23,393.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இதையும் படிக்க |காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்...! - ஆய்வில் முக்கியத் தகவல்
சென்செக்ஸ் பங்குகளில் டாடா ஸ்டீல், பவர் கிரிட், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை சரிவைச் சந்தித்தன.
அதே நேரத்தில் எம்&எம், பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்தன.