சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் வீழ்ச்சி!
பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
83,658.20 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 306.48 புள்ளிகள் குறைந்து 306.48 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 101.80 புள்ளிகள் குறைந்து 25,374.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
துறை ரீதியாக நிஃப்டி ஐடி அதிக இழப்பைச் சந்தித்து வருகிறது. விப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
ஆட்டோ, பார்மா, எஃப்எம்சிஜி குறியீடுகளும் சரிவுடன் தொடங்கிய நிலையிலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஓரளவு லாபமடைந்துள்ளன.
சென்செக்ஸ் பங்குகளில் டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
அதேநேரத்தில் டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், டிசிஎஸ்,ஏசியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி, எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாகக் குறைந்தன.