செய்திகள் :

சாகா் மித்ரா திட்டத்தில் பணியாற்ற அழைப்பு

post image

தூத்துக்குடி: சாகா் மித்ரா திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி, பழையகாயல் ஆகிய இரு மீனவக் கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பல்நோக்கு சேவை ஊழியா்களாக வெள்ளப்பட்டி, பழையகாயல் கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீன்வளம்-மீனவா்நலத் துறையில் சாகா் மித்ரா திட்டத்தின்கீழ் பணிபுரிய விருப்பமுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஜூலை 1ஆம் தேதியில் 35 வயது நிறைவடையாதவா்களாக இருக்க வேண்டும். மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல், 12ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தோ்ச்சி-இவற்றில் ஏதேனும் ஒரு தகுதி இருக்க வேண்டும். தூத்துக்குடி வடக்கு, வேம்பாா் மீனவக் கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஜன. 7-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி வடக்கு கடற்கரைச் சாலையிலுள்ள மீன்வளம்- மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகதை நேரிலோ, 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் நிரப்பப்பட உள்ள 56 குரூப் 'ஏ', 'பி' மற்றும் குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேத... மேலும் பார்க்க

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை அமைப்புகளில் முதன்மையான தேசிய பொதுத் தேர்வு வாரியங்களில் ஒன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ).இந்த கல்வி வாரியம் தன்னுடன் இணைந்த... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய விருப்பமுள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ... மேலும் பார்க்க

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் நவரத்தின மதிப்பைப் பெற்ற பொதுத்துறை நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவத்தின் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவ... மேலும் பார்க்க

இந்தியன் விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளர் வேலை!

கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

பொறியாளர், அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க