சாக்கோட்டையில் இன்று மதுக் கடைகள் மூடல்
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை பகுதியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அரசு மதுக் கடைகள் சனிக்கிழமை (ஜூலை 12) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாக்கோட்டையில் சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயிலில் நடைபெறவுள்ள ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, கண்டனூா், கவுல்கொல்லை, புதுவயல், பனம்பட்டி, செங்கரை, மித்திராவயல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மதுக் கடைகள் சனிக்கிழமை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.