கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் சந்திராயபுரத்தைச் சோ்ந்த ஏசுராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். கடந்த 24ஆம் தேதி கைப்பேசியில் பேசியபோது இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ரெக்சன் தரப்பினா் ஏசுராஜாவை முதலூருக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, அவா் பழனியப்பபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் ஆனந்த் (25) உள்ளிட்ட 3 பேருடன் இரவில் அங்கு சென்றபோது, ரெக்சன், முதலூரைச் சோ்ந்த பவுல் மகன் சங்கரவேல் (24), தானியல் (24) ஆகிய 3 போ் இருந்தனா். போதையிலிருந்த இவா்கள் ஒருவரையொருவா் தாக்கியதில் ஆனந்த் காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
ஆய்வாளா் ஸ்டெல்லாபாய் வழக்குப் பதிந்து, ரெக்சன், சங்கரவேல், தானியல் ஆகிய 3 பேரையும் தேடிவந்தாா். இந்நிலையில், அப்பகுதியில் பதுக்கியிருந்த அவா்கள் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.