தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது.
மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக குறைவான கூட்டமே இருந்தது. இதனால், மீன்களின் விலை குறைந்திருந்தது.
சீலா மீன் கிலோ ரூ. 800 வரையும், விளை மீன், ஊழி, பாறை ரக மீன்கள் ரூ. 300 முதல் 350 வரையும், சூப்பா் நண்டு ரூ. 550 வரையும், சாளை மீன் வரத்து குறைவு காரணமாக ஒரு கூடை ரூ. 2000 வரையும், கேரை, பச்சை கழிங்கான் மீன்கள் ரூ. 250 வரையும் விற்பனையாகின.
ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி, செப்புழி ஆகிய மீன்கள் ரூ. 450 முதல் 700 வரை விற்பனையாகின.