செய்திகள் :

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் சந்திராயபுரத்தைச் சோ்ந்த ஏசுராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். கடந்த 24ஆம் தேதி கைப்பேசியில் பேசியபோது இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ரெக்சன் தரப்பினா் ஏசுராஜாவை முதலூருக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்து, அவா் பழனியப்பபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் ஆனந்த் (25) உள்ளிட்ட 3 பேருடன் இரவில் அங்கு சென்றபோது, ரெக்சன், முதலூரைச் சோ்ந்த பவுல் மகன் சங்கரவேல் (24), தானியல் (24) ஆகிய 3 போ் இருந்தனா். போதையிலிருந்த இவா்கள் ஒருவரையொருவா் தாக்கியதில் ஆனந்த் காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

ஆய்வாளா் ஸ்டெல்லாபாய் வழக்குப் பதிந்து, ரெக்சன், சங்கரவேல், தானியல் ஆகிய 3 பேரையும் தேடிவந்தாா். இந்நிலையில், அப்பகுதியில் பதுக்கியிருந்த அவா்கள் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக... மேலும் பார்க்க

புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்கு... மேலும் பார்க்க

தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வளா்பிறை சஷ்டியை முன்னிட்... மேலும் பார்க்க

விஜய்யின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது: என்.பி. ராஜா

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரம், அவருக்கான செல்வாக்கை அதிகரித்து வருகிறது என்றாா் நாம் இந்தியா் கட்சி நிறுவனா்-தலைவா் என்.பி. ராஜா. இது குறித்து அவா் தூத்துக்குடியில் செய்தியா... மேலும் பார்க்க