செய்திகள் :

சாத்தான்குளம் அருகே கிணற்றில் பாய்ந்த ஆம்னி வேன்: 5 பேரும் பலி

post image

சாத்தான்குளம் அருகே கிணற்றில் ஆம்னி வேன் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் சனிக்கிழமை பாய்ந்தது.

பொக்லைன் மூலம் நடந்த மீட்பு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மீட்புக்குழு வீரர்கள் மீட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் கிணற்றில் இருந்த வேன் மீட்கப்பட்டது.

சர்ச்சை கருத்து விவகாரம்- மன்னிப்பு கோரினார் செல்லூர் ராஜூ

3 பேர் ஆம்னி வேனில் இருந்து வெளியேறிய நிலையில் மற்ற 5 பேரின் உடல்களையும் மீட்புக்குழுவினர் மீட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கிணற்றில் ஆம்னி வேன் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

தேனி: கும்பக்கரை அருவியில் இன்று(மே 18) காலை 10 மணு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், ஆந்திர மாநிலங்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெய்யிலின் தாக்கம் குறையும்!

தமிழகத்தில் தொடா்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெய்யிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இது குறித்து அவா் சென்னையில் சனி... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை; தொழிலதிபா் வீட்டுக்கு ‘சீல்’

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை சோதனை சென்னையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்றும் நீடித்தது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தொழிலதிபரின் வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று தஞ்சாவூா் பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் செல்கிறாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தென் மண்டல கலாசார மையத்தில் ‘சலங்கை நாதம் - 2025’ எனும் தேசிய கைவினை கலைஞா்களின் கலைவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: அமைச்சா் சிவசங்கா் உறுதி

தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாகவுள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூா்த்தி செய்ய முடியும்”என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கோடை சுற்றுலா: கல்வித் துறை ஏற்பாடு

அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவா்கள் 1,500 போ் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்ப... மேலும் பார்க்க