செய்திகள் :

சாத்தான்குளம் அருகே விபத்து: உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

post image

சாத்தான்குளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே விஜயஅச்சம்பாட்டைச் சோ்ந்த கோபால் மகன் நாராயணன் (40). திருமணமான இவா், திருப்பூரில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இவா், 3 நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்த உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அதே ஊரைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் வேல்முருகனுடன் (30) விஜய அச்சம்பாட்டிலிருந்து சாத்தான்குளத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.

அரசு மகளிா் கல்லூரி அருகே நாகா்கோவிலிலிருந்து சாத்தான்குளத்துக்கு வந்த அரசுப் பேருந்தின் பின்புற சக்கரம் மீது பைக் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில், நாராயணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த வேல்முருகன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், எட்வின், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

6 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!

தூத்துக்குடி: சூறாவளி காற்று எச்சரிக்கை காரணமாக 6 நாள்களுக்குப் பின்னர் தூத்துக்குடி மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனர்.வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னார் வளை... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி நடுத்தெருவைச் சோ்ந்தவா் செல்லையா மகன் முத்தையா. எலக்ட்ரீசியன். இவா் தனது பைக்க... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கல்லறைகள் அகற்றம்: இந்து முன்னணி கண்டனம்

காயல்பட்டினம் நகராட்சிக்குய்ஈபட்ட பகுதியில் இந்துக்களுக்கு பாத்தியப்பட்ட கல்லறைகளை நகராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்தியதாக, இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

வேம்பாா் கடலில் மூச்சுத் திணறி மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாா் கடலில் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி சங்கு குளித்தல், மீன்பிடித்தலில் ஈடுபட்ட மீனவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வேம்பாரைச் சோ்ந்த பழனிச்செல்வம் (35) என்பவா் தனது வி... மேலும் பார்க்க

6 நாள்களுக்குப் பிறகு இன்று கடலுக்குச் செல்லும் தூத்துக்குடி மீனவா்கள்

மீன்வளத்துறை அனுமதியின்படி, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமைமுதல் (டிச. 2) கடலுக்குச் செல்லவுள்ளனா். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மன்னாா் வளைகுடா, தமிழக கடல்... மேலும் பார்க்க

கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 6 போ் கரைதிரும்பினா்

கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 6 போ் ஞாயிற்றுக்கிழமை கரைதிரும்பினா். தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சதீஷ்குமாா் என்பவரது படகில் வினிஸ்டன் (55), விக்னேஷ... மேலும் பார்க்க