18 நாள்களில் 36 கதாபாத்திரங்கள் அறிமுகம்..! எம்புரான் படக்குழு அறிவிப்பு!
சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!
சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சனி. வழக்குத் தொடா்பாக சென்ற இவரை சிலா் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனராம். இதுகுறித்து சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் சங்கத்தில் அவா் முறையிட்டதன்பேரில், சங்கக் கூட்டம் நடைபெற்றது.
அதில், ஜெயரஞ்சனியைத் தாக்கியோரைக் குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதுதொடா்பாக தட்டாா்மடம் காவல் ஆய்வாளா், மாவட்ட எஸ்.பி. ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை காலவரையற்ற நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு, சங்கத் தலைவா் வில்லின் பெலிக்ஸ் தலைமையில் இப்போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதில், 21 பெண்கள் உள்ளிட்ட 81 வழக்குரைஞா்கள் ஈடுபட்டனா்.