செய்திகள் :

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து!

post image

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே முத்தாண்டியாபுரத்தில் ரகுநாதன்(50) என்பவருக்குச் சொந்தமான தனலட்சுமி என்ற பெயரில் இயங்கி வந்த தீக்குச்சி தயாரிப்பு குடோன், கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த தீக்குச்சி குடோனில் இன்று(புதன்கிழமை) அதிகாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்புப்படையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை நேரம் என்பதால் உள்ளே யாரும் இல்லாததன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் ரகுநாதன் என்பவருக்குச் சொந்தமாக கரிசல்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் விதிமீறல் காரணமாக சமீபத்தில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தற்போது வெடி விபத்து ஏற்பட்ட குடோனில் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

மின் கசிவு காரணமாகவோ அல்லது பட்டாசு தயாரிக்கும்போதோ வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வெடி விபத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமானது. இதுதொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர்கள் மணிசங்கர் குருநாதன் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உழைப்பாளர் நாள்: தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகள் அடைப்பு!

உழைப்பாளர் நாளையொட்டி தமிழகம் முழுவதும் நாளை(மே 1) மதுக்கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.டாஸ்மாக் விற்பனை மதுபானக் கடைகள் அதனோடு இணைந்த மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கூடங்கள், நட்சத்திர விடுதி... மேலும் பார்க்க

விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா, மணிமண்டபம்! தேமுதிக பொதுக் குழுவில் தீர்மானம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசையும் மணிமண்டபம் கட்ட தமிழக அரசை வலியுறுத்தியும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தருமபுரி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் கொண்ட இணையப்பக்கம்: மு.க. ஸ்டாலின்

சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட விரும்புபவர்களுக்கான இணையப்பக்கம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தம்பி அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கா... மேலும் பார்க்க

கூட்டாட்சி என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின்

தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல... மேலும் பார்க்க

சென்னை மக்கள் கவனத்துக்கு... பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை!

தமிழ்நாடு அரசின் ”நம்ம சென்னை நம்ம சந்தை” அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னைவாழ் மக்களுக்கு பாரம... மேலும் பார்க்க

60,000 பேருக்கு வேலை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் (electronic components) உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை (Tamil Nadu Electronics Components Manufactur... மேலும் பார்க்க