இளம் வீரர்களுடன் களமிறங்கிய ஆஸி..! 214 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு
சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பிப். 5 நிகழ்ந்த வெடிவிபத்தில் இருவர் பலியான நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பிப். 5 இடைவேளைக்குப் பிறகு, ஓா் அறை பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. மேலும், அடுதடுத்து 7 அறைகள் வெடித்துச் சிதறின.
இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்து துவாா்பட்டியைச் சோ்ந்த ராமலட்சுமி (50) உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!
இந்த வெடி விபத்தில் அதிவீரன்பட்டியைச் சோ்ந்த வீரலட்சுமி (37), அவரது சகோதரி கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி (32), பொம்மையாபுரத்தைச் சோ்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சோ்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சோ்ந்த சைமன் டேனியல் (33) ஆகிய 6 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரலட்சுமி(35) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
அவரது சகோதரி கஸ்தூரி உள்பட 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.