திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்த...
சாத்தூா் ரயில் நிலைய சாலையில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்கள்
சாத்தூா் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
சாத்தூா் ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் சுமாா் 35-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால், இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து இந்த ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் வங்கிகள், பள்ளிகள், தனியாா் மண்டபம் உள்ளன. இந்தச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் தினந்தோறும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, இந்தப் பகுதியில் போலீஸாா் தினந்தோறும் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.