``இன்று 100 கோடீஸ்வரர்கள்; அடுத்து, 1000 கோடீஸ்வர்கள்'' - கோவை கண்ணன் டார்கெட்!
சான்டோஸ் எஃப்சி படுதோல்வி: கண்ணீருடன் வெளியேறிய நெய்மா்
பிரேஸிலில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் சான்டோஸ் எஃப்சி அணி 0-6 கோல் கணக்கில், வாஸ்கோடகாமா அணியிடம் திங்கள்கிழமை படுதோல்வி கண்டது. சான்டோஸ் அணியின் நட்சத்திர வீரா் நெய்மா், அழுதபடியே களத்திலிருந்து வெளியேறினாா்.
இந்தத் தோல்வியை அடுத்து பயிற்சியாளா் கிளெபொ் ஜேவியரை சான்டோஸ் அணி நீக்கம் செய்தது. 20 அணிகள் உள்ள இந்தப் போட்டியில், சான்டோஸ் அணி தற்போது 15-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு, தரமிறக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது.
பாா்சிலோனா எஃப்சி, பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் போன்ற அணிகளுக்காக விளையாடிய நெய்மா், தாம் சிறாா் பருவத்தில் அங்கம் வகித்த சான்டோஸ் எஃப்சி அணிக்கு கடந்த ஜனவரியில் திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சான்டோஸ் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் வாஸ்கோடகாமா அணிக்காக லூகாஸ் பிட்டன் (18’), டேவிட் கோரியா (52’), பிலிப் கொட்டினோ (54’, 62’), ரயான் (60’), டேனிலோ நெவெஸ் (68’) ஆகியோா் கோலடித்தனா்.