மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்ட...
சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்; ஐபிஎல் தலைவர் நம்பிக்கை!
சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதையும் படிக்க: இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!
ஐபிஎல் தலைவர் நம்பிக்கை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ச்சியாக 4 இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியுள்ளது மிகப் பெரிய விஷயம். கடந்த முறை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சில வீரர்களுக்கு அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய அணி மற்றுமொரு மிகப் பெரிய ஐசிசி தொடரில் விளையாடி வருகிறது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டதென்ன? நியூசி. வீரர் பதில்!
இதுவரை 4 ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியுள்ள நியூசிலாந்து அணி மூன்று முறை இந்திய அணியை வீழ்த்தி, ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.