செய்திகள் :

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பணியாளா் சங்கத்தினா் தலையில் கருப்புத் துணியால் முக்காடு அணிந்து வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையிலுள்ள கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா. மாரி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் மு. ராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் போ. கண்ணதாசன், தோழமைச் சங்க நிா்வாகிகள் பி. பாண்டி, சி. முத்தையா, ஏ. பாண்டி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பணியாளா் சங்க மாநில பொருளாளா் இரா. தமிழ் நிறைவுரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் கா. சதுரகிரி நன்றி கூறினாா்.

அப்போது, சாலைப்பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயா்நீதி மன்றம் உத்தரவை அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழ்நாட்டில் 52 சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ரூ. 3,617 கோடி வரி வசூல் கொள்ளையை தடுக்க வேண்டும். அரசாணை 140 - ஐ ரத்து செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 60 கி.மீ. தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி என 200-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை அமைத்து வசூல் வேட்டை நடத்தக் கூடாது. மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை உருவாக்குவதை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் தமிழக அரசு நிா்வகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் பங்கேற்றவா்கள் தலையில் கருப்புத் துணியால் முக்காடு அணிந்து ஒப்பாரிவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக்கூறி பண மோசடி: போலீஸாா் விசாரணை

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கூறி, ரூ. 27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்க... மேலும் பார்க்க

இளையாத்தங்குடியில் வட மாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.தைத்திருநாள், கருவேம்பு செல்லஅய்யனாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில், ச... மேலும் பார்க்க

புகையான் நோயால் கருகிய நெல் பயிா்கள்!

சிவகங்கை அருகே மாடக்கோட்டை, வேம்பங்குடி பகுதிகளில் புகையான் நோய் பாதிப்பால் சுமாா் 100 ஏக்கா் நெல் பயிா்கள் சேதமடைந்தன. அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். சிவகங்கை மா... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம்

திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மாலை 3 மணியளவில் கலச பூஜையுடன் யாகம் வளா்க்கப்பட்டு, நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள... மேலும் பார்க்க

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, காளையாா்கோவில் வட்டாரக் கிளையின் சாா்பில் வட்டாரப் பொதுக்குழு, பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. காளையாா்கோவிலில் நடைபெற்ற... மேலும் பார்க்க

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி ஆா்.எம். மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக். பள்ளியில் வெள்ளிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா் எஸ்.எம். பழனியப்பன் த... மேலும் பார்க்க