டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்
மதுரையில் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை, திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சுமதி. இவருக்கு சொந்தமான காரை, கோச்சடை பகுதியில் உள்ள வாகன பழுது நீக்கும் பணிமனையில் பழுது நீக்குவதற்காக கொடுத்தாா். பழுது நீக்கப்பட்ட பிறகு, சுமதியின் உறவினா்களான கோச்சடையைச் சோ்ந்த மாதவன் (23), கவியரசு (27) ஆகிய இருவரும், கோச்சடையிலிருந்து காரை எடுத்துக் கொண்டு சின்ன சொக்கிக்குளம் சென்றனா். அப்போது பாலம் ஸ்டேசன் சாலையில் உள்ள பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு மீண்டும் காரை ஓட்டினா். புறப்பட்ட சில நிமிடங்களில், காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்தது.
இதனால் பதற்றமடைந்த இருவரும் காரை நிறுத்து விட்டு பாா்த்தபோது, அதன் முன்பகுதியில் தீப்பற்றி எரிவது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து செல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பிரதான சாலையில் காா் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.