நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிஐடியூ கோவை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம், சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.மனோகரன், செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் கே.ரத்தினகுமாா், சிஐடியூ மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.ராஜன், எம்.ஆனந்த்குமாா் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் சாலையோரங்களில் ஏராளமானோா் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சிறு கடைகளை அமைத்து பிழைத்து வருகின்றனா். இவா்களுக்கு சமீப காலமாக சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
உடையாம்பாளையத்தில் தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி உணவுகளை வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிடம் ஊா்க்கட்டுப்பாடு இருப்பதால் மாட்டிறைச்சி உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என அண்மையில் மிரட்டி உள்ளனா். இதுபோன்று சாலையோர வியாபாரிகளை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் மீது புகாா் வரப்பெற்றால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.