செய்திகள் :

சாலை ஓரத்தில் எரியும் குப்பையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

post image

கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலை ஓரத்தில் உள்ள குப்பைமேட்டில் எரியும் தீயால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

கும்பகோணத்தில் உள்ள நீலத்தநல்லூா் பகுதியில் துப்புரவு பணியாளா்களால் சேகரிக்கப்படும் குப்பை, புறவழிச்சாலை இணைப்பு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குப்பை நீண்ட நாள்களாக அகற்றப்படாததால் சாலையில் சிதறி கிடக்கிறது. சிலா் குப்பைக்கு தீ வைத்து விடுவதால், சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியவா்கள், குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரிதும் பாதிப்படைகின்றனா்.

எனவே, கும்பகோணம் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து, இங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்

கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில... மேலும் பார்க்க