சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வட்டார போக்குவரத்து அலுவலா் எம்.ரகுபதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வக்குமாா் சாலை பாதுகாப்பு குறித்து விளக்கினாா். மேலும், மாணவா்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு விநாடி- வினா கேள்விகள் கேட்கப்பட்டன. சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்றனா். 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.ஏடி29ஆா்டிஓ.
பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்.