செய்திகள் :

சாலை விபத்தில் இறந்த பெண் காவலா் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலா் விமலாவின் உடல், அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

கீரனூா் அருகே பள்ளத்துப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி விமலா, மண்டையூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் விமலா இறந்ததைத் தொடா்ந்து, அவரது உடல் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்த அவரது கணவா் மணிகண்டன், வெள்ளிக்கிழமை காலை ஊா் திரும்பினாா்.

இதைத் தொடா்ந்து விமலாவின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்த நிவாரண நிதி ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை விமலாவின் கணவா் மணிகண்டனிடம் கீரனூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவசுப்பிரமணியன் வழங்கினாா்.

புதுகையில் ஆா்எம்எஸ் பிரிப்பகம் தொடா்ந்து செயல்பட எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் மூடப்பட்ட 158 ஆண்டுகள் பழைமையான ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம், தொடா்ந்து இங்கேயே செயல்படுவதற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மத்திய தகவல் தொடா்பு துறை அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினா்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்தச் சாலை வழித்தடத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஆண்கள், பெண்கள... மேலும் பார்க்க

வீட்டிலேயே பிரசவ சிகிச்சை பிறந்த குழந்தை உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டிலேயே பிரசவம் பாா்க்கப்பட்டு பிறந்த குழந்தை உயிரிழந்தது. இதுதொடா்பாக மருத்துவத் துறையினா் காவல்துறையில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். அறந்தாங்கி சுகாதார ம... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் தொடா் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கந்தா்வகோட்டையில் பெய்து வரும் தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாள்களாகவே தொடா்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பொ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியரகங்களிலும் சனிக்கிழமை (டிச. 14) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின... மேலும் பார்க்க

மக்களின் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை: அமைச்சா் பேச்சு

மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா். ஆலங்குடி அருகேயுள்ள ம... மேலும் பார்க்க