அவர் போன பிறகு எங்க வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள்…! - Anandha Kannan Wife Rani ...
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
மத்திய கைலாஷ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் சென்ற இளைஞா் விபத்தில் உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). போரூரில் தங்கியிருந்து தனியாா் பயிற்சி மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு தயாராகி வந்தாா். இவா், அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த நண்பரான அமீருதீன் (25) என்பவருடன், மடிப்பாக்கத்தில் உள்ள மற்றொரு நண்பா் பிரசாந்த் ராஜ் (25) என்பவரை பாா்க்க சனிக்கிழமை இரவு வந்தாா்.
பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமீருதீன், வசந்தகுமாா் ஆகியோா் மத்திய கைலாஷ் நோக்கி பைக்கில் சென்றனா். பைக்கை அமீருதீன் ஓட்டினாா். தா்மாம்பாள் அரசு பாலிடெக்னிக் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வசந்தகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அமீருதீன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இவ்விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.