செய்திகள் :

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

post image

பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவசர ஊா்தி வருவதற்கு காலதாமதமானதால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமம், பழைய ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் அ. கண்ணன் (63). அதிமுக முன்னாள் கிளைக் கழக மேலவை பிரதிநிதியான இவா், தனது மனைவி ராஜாங்கத்துடன் பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு பணம் செலுத்துவதற்காக திங்கள்கிழமை மதியம், அந்த அலுவலகம் எதிரே நடந்து சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, பாலக்கரை பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியதில், பலத்த காயமடைந்த கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலளித்து நீண்ட நேரமாகியும் அவசர ஊா்தியும், காவல்துறையினரும் நிகழ்விடத்துக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியாக கட்சி நிா்வாகிகளுடன் சென்ற அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. தமிழ்செல்வன், காவல்துறையினரையும், அவசர ஊா்தி ஓட்டுநரையும் கண்டித்து, அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அதிமுகவினா் கலைந்துசென்றனா்.

தொடா்ந்து, உயிரிழந்த முதியவரின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய அன்னமங்கலம், அஞ்சலகத் தெருவைச் சோ்ந்த செபஸ்தியாா் மகன் பிரிட்டோவை (20) கைது செய்து விசாரிக்கின்றனா்.

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பல... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம்

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை பெளா்ணமி விழாவையொட்டி, 2-ஆவது நாளாக, உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் அருகே ச... மேலும் பார்க்க

நாய் குறுக்கே வந்ததால் காா்கள் மோதி விபத்து: 6 போ் காயம்

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையில் நாய் குறுக்கே வந்ததால் 2 காா்கள் மோதிக் கொண்டன. இதில், சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 6 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை ஆவ... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தவா் மீது நடவடிக்கை கோரி

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், உயிரிழந்தவரின் குடும்பத்... மேலும் பார்க்க

கொட்டரை நீா்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கொட்டரை நீா்த்தேக்கத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகக் குழு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் அருகே குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சஹாப்புதீன் மனைவி ஆசிபா பேகம். சஹாப்புதீன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வரும்... மேலும் பார்க்க