செய்திகள் :

நாய் குறுக்கே வந்ததால் காா்கள் மோதி விபத்து: 6 போ் காயம்

post image

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையில் நாய் குறுக்கே வந்ததால் 2 காா்கள் மோதிக் கொண்டன. இதில், சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னை ஆவடி அருகேயுள்ள கவுரிப்பேட்டை, ஈஸ்வரன் கோயில் செயின்ட் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (46). இவா், தனது மனைவி சிவராணியுடன் (40) சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தாா். காரை, ஆவடி அருகேயுள்ள வசந்தம் நகரைச் சோ்ந்த சின்னசாமி மகன் சுப்பிரமணியன் (48) ஓட்டினாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு மின்வாரிய அலுவலகம் அருகே திங்கள்கிழமை அதிகாலை காா் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததால், காா் ஓட்டுநா் சுப்பிரமணியன் திடீரென பிரேக் பிடித்துள்ளாா். அப்போது, சென்னையிலிருந்து திண்டுக்கல்லை நோக்கிச் சென்ற காா், முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஸ்ரீதா் காரின் பின்புறத்தில் மோதி, சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி காா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த திண்டுக்கல் புதுப்பட்டி அருகேயுள்ள கனப்பாடி கிராமத்தைச் சோ்ந்த நல்லையா (30), அவரது மனைவி சத்யா (25), இவா்களது மகன் மதுமித்ரன் (1), உறவினா்களான நாகராஜ் மனைவி சரஸ்வதி , இவரது குழந்தைகள் இலக்கியா (16), சபரிநாதன் (12) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவசர ஊா்தி வருவதற்கு காலதாமதமானதால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பல... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம்

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை பெளா்ணமி விழாவையொட்டி, 2-ஆவது நாளாக, உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் அருகே ச... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தவா் மீது நடவடிக்கை கோரி

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், உயிரிழந்தவரின் குடும்பத்... மேலும் பார்க்க

கொட்டரை நீா்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கொட்டரை நீா்த்தேக்கத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகக் குழு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் அருகே குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சஹாப்புதீன் மனைவி ஆசிபா பேகம். சஹாப்புதீன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வரும்... மேலும் பார்க்க