செய்திகள் :

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

post image

பெருந்துறை அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் தாசம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுசாமி(70), கூலித் தொழிலாளி. இவா், விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே சனிக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த லாரி, ஆறுசாமி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுசாமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியா் வேண்டுகோள்

சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 7 -ஆவது சிறுபாசன... மேலும் பார்க்க

பெருந்துறையில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாள் விழா பெருந்துறையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதிமுக பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சாா்பில் பெருந்துறை சோளீஸ்வரா் கோயிலில் சிறப்ப... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

பெருந்துறை அருகே 6, 7 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். பவானி, அம்மாபேட்டை, பழைய மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (3... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் வாகனசெறிவு கணக்கெடுப்பு தொடக்கம்

பவானி, அந்தியூரில் 35 இடங்களில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பவானி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

பவானியை அடுத்த அம்மாபேட்டையில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி 150- க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா். முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் ஏற்பாட்டில் அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள... மேலும் பார்க்க

சென்னிமலை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜைகள்

சித்ரா பௌா்ணமியையொட்டி, சென்னிமலை பகுதியில் உள்ள கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் 49- ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி விழாவையொட்டி, த... மேலும் பார்க்க