Oil:``பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபமடைகிறார்கள்" - USA வர்த்தக ஆலோசகர...
சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல்(58). பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சிவகாசிக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த சீனியம்மாள் (65) ‘லிப்ட்’ கேட்டு அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டாா்.

மாயத்தவேன்பட்டியிலிருந்து சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் பிரதான சாலைக்கு செல்லும் வழியில் இவா்களது வாகனம் மீது, பின்னால், எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த சக்திவேல், சீனியம்மாள் ஆகிய இருவரும் லாரிக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த மல்லி போலீஸாா் இரு உடல்களையும் கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, லாரியை ஒட்டி வந்த மாரனேரியைச் சோ்ந்த முத்துவைரம் என்பவரைக் கைது செய்தனா்.