சத்தீஸ்கரிலிருந்து கும்பமேளா சென்றவர்கள் கார் விபத்து: 10 பேர் பலி!
சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள விளாா் உச்சிமான்சோலை கிராமத்தைச் சோ்ந்தவா் பரமசிவம் (55) விவசாயி. இவா் நீடாமங்கலம் அருகேயுள்ள ஓதியடிப்படுகை கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை வந்தாா்.
பின்னா், இரவில் தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, நீடாமங்கலம்-தஞ்சாவூா் சாலையில் ராஜேந்திரா நகா் பகுதியில் முன்னே சென்ற லாரி திடீரென நின்றதால், அதன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சந்தானமேரி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.