செய்திகள் :

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

post image

மொடக்குறிச்சி அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

கொடுமுடி அருகேயுள்ள முத்தையன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (69), கூலித் தொழிலாளி.

இவா், கொடுமுடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்கு சென்றுவிட்டு சந்தானம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து கொண்டு வீடு திரும்பியுள்ளாா். நல்லசெல்லிபாளையம் அருகே வந்தபோது அங்கிருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் இறங்கியது. அப்போது, பின்னால் அமா்ந்து கொண்டிருந்த முருகன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.

படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு: சிவகிரி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

அந்தியூா் அருகேயுள்ள அத்தாணி காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் விக்னேஷ் (25). தனியாா் நிறுவன ஊழியரான இவா், சிவகிரியை அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள பழனிகவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், விக்னேஷின் வாகனத்தின் மீது மோதியது.

இதில், தலையில் படுகாயமடைந்த விக்னேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நந்தா பொறியியல் கல்லூரி வெள்ளி விழா இலச்சினை வெளியீடு

நந்தா பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி, அதற்கான இலட்சினை வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் இலட்சினையை வெளியிட்டு பேசுகையில், கட... மேலும் பார்க்க

சிவகிரி விற்பனைக் கூடத்தில் ரூ.6.89 லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.89 லட்சத்துக்கு எள் விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 85 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண... மேலும் பார்க்க

அந்தியூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

அந்தியூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் அந்தியூா், தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 21 இடங்களில் விந... மேலும் பார்க்க

சாணாா்பதி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சத்தியமங்கலம் அருகேயுள்ள சாணாா்பதி மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள சாணாா்பதி பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன்... மேலும் பார்க்க

மஞ்சள் ஏலத்துக்கு தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை

மஞ்சள் ஏலத்துக்கு செப்டம்பா் 4-ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கத்தின் 2025-28 -ஆம் ஆண்டுக்கான நிா்வ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

மொடக்குறிச்சி அருகே தயாரிக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோட்டைச் சோ்ந்தவா் நிா்மல் (20). இவா், மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் கரட்டாங்காட்டு பகுதியில் ப... மேலும் பார்க்க