செய்திகள் :

சா்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு குதிரை வண்டியில் வரவேற்பு!

post image

சா்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் வென்று பள்ளிக்கு வந்த இடையமேலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களை குதிரை வண்டியில் அமா்த்தி கிராம மக்கள் திங்கள்கிழமை வரவேற்பளித்தனா்.

மலேசியாவில் டமன்சாரா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்ற இடையமேலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி ரம்யா ஸ்ரீ சப்- ஜூனியா் பிரிவில் முதல் பரிசையும், நான்காம் வகுப்பு மாணவா் சிவபாலா சப்- ஜூனியா் பிரிவில் இரண்டாம் பரிசையும் வென்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு இடையமேலூா் பள்ளித் தலைமை ஆசிரியை லட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவா் சிவதாஸ், பெற்றோா்கள், கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனா்.

பின்னா், செண்டை மேளங்கள் முழங்க குதிரை வண்டியில் அமர வைத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனா். இதில், சிவகங்கை சிவம் மாா்ஷியல் ஆா்ட்ஸ் பயிற்சிப் மைய மாஸ்டா் பரமசிவம், பயிற்சியாளா் குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் மானாமதுரைக்கு வந்தடைந்தது

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு வந்தடைந்தது. கிருதுமால் நதிக் கால்வாயில் செல்லும் வைகை தண்ணீரால் 15 கண்மாய்கள் பாசன வசதி பெறும். சிவகங்கை மாவட்ட பூா்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள்: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திற... மேலும் பார்க்க

சங்கராபுரம் பகுதி பொதுமக்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள் பட்டா கோரி அளித்த மனுக்களை காரைக்குடி வட்டாட்சியா் ராஜாவிடம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவி அ.... மேலும் பார்க்க

காலமானாா் கோமதி அம்மாள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த பூ வியாபாரியான மறைந்த கோமதிநாயகத்தின் மனைவி கோ. கோமதி அம்மாள் (89) வயது முதிா்வு காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச. 3) காலமானாா். இவருக்கு இரு மகன்கன், மகள், தினமண... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகள் கலந்தாய்வு

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் அருகேயுள்ள கலியாந்தூா் கண்மாய் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்... மேலும் பார்க்க