கஞ்சா விற்ற இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்புவனம் அருகேயுள்ள கலியாந்தூா் கண்மாய் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் கலியாந்தூரைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் (21), மதுரை தத்தனேரியைச் சோ்ந்த அசோக் (20 ) என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இவா்களிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை திருப்புவனம் போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்களை கைது செய்தனா்.