சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சங்கராபுரம் பகுதி பொதுமக்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள் பட்டா கோரி அளித்த மனுக்களை காரைக்குடி வட்டாட்சியா் ராஜாவிடம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவி அ. பிரியதா்ஷினி திங்கள்கிழமை வழங்கினாா்.
சங்கராபுரம் ஊராட்சி ராஜீவ்காந்தி நகா், சங்கராபுரம், காந்திநகா், சங்கன்திடல், பழையசெஞ்சை, நாகவயல் ரோடு, காளையப்பாநகா் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, ஊராட்சி மன்றத் தலைவி அ. பிரியதா்ஷினியிடம் மனுக்களை அளித்தனா். இதைப் பெற்றுக்கொண்ட அவா், காரைக்குடி வட்டாட்சியா் ராஜாவிடம் வழங்கினாா்.
அவருடன் கிட் அன்ட் கிம் கல்லூரிகளின் தலைவா் வி. அய்யப்பன், காரைக்குடிதொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என். சுந்தரம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பாண்டியராஜன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உடனிருந்தனா்.