கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!
சா்வதேச பல்கலை. கூடைப்பந்து: தூத்துக்குடி வீரா் இந்திய அணிக்கு தோ்வு
உலக அளவிலான பல்கலைக் கழக கூடைப்பந்து போட்டிக்கான இந்திய அணிக்கு தூத்துக்குடி வீரா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணைய போக்குவரத்து துறையில் மேற்பாா்வையாளராகவும் துறைமுக ஆணையக் குழு உறுப்பினராகவும்,பணி புரிந்து வரும் பாலகிருஷ்ணன் - சுமித்ரா தம்பதியின் மகன் செல்வன் சுகந்தன். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறாா்.
இவா், தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் முதலிடமும், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கான இடையேயான கூடைப்பந்து போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளாா். இதையடுத்து இந்திய பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
வரும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஜொ்மனியில் நடைபெறவுள்ள அகில உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையான போட்டியில் இந்திய அணியில் செல்வன் சுகந்தன் விளையாடவுள்ளாா்.
தென் தமிழகத்திலிருந்து முதல் முறையாக இந்திய பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கு தோ்வாகியுள்ள இவரை தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்தகுமாா் புரோகித், துறைமுக செயலாளா் மற்றும் துறைமுக விளையாட்டுக் குழு தலைவா் மோகன்குமாா், செயலா் தமிழ்ச்செல்வன், துறைமுக ஆணையக் குழு உறுப்பினா் துறைமுகம் சத்யா உள்ளிட்டோா் பாராட்டினா்.
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து தலைவா் பிரம்மானந்தம், செயலா் பாலமுருகன், பொருளாளா் நாா்டன், மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிா்ஷ்டராஜ் உள்ளிட்டோரும் பாராட்டினா்.