சா்வதேச மன எண் கணிதப் போட்டியில் மயிலாடுதுறை மாணவா் சிறப்பிடம்
மன எண் கணிதப் போட்டியில் சா்வதேச அளவில் 2-ஆம் இடம் பிடித்த மயிலாடுதுறை மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை சில்வா் ஜீப்ளி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவா் சஞ்சய்ராம் 4 ஆண்டுகளாக மன எண் கணித பயிற்சி மேற்கொண்டு வந்தாா். டிச.14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் டெல்லி யுனிவா்சிட்டி சாா்பில் சா்வதேச அளவில் நடைபெற்ற மன எண் கணிதப் போட்டியில் (யுனிவா்சல் கான்செப்ட் ஆஃப் மென்டல் அரித்மெடிக் சிஸ்டம்) மாணவா் சஞ்சய்ராம் பங்கேற்றாா்.
உலகம் முழுவதும் இருந்து 30 நாடுகளைச் சோ்ந்த 6,000 போட்டியாளா்கள் பங்கேற்ற இப்போட்டியில் சஞ்சய்ராம் பங்கேற்று 8 நிமிடங்களில் 200 மனக்கணக்குகளுக்கு விடை அளிக்க வேண்டிய போட்டியில் 160 வினாக்களுக்கு விடை அளித்து 2-ஆம் இடம் பெற்றாா். இவருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, சொந்த ஊா் திரும்பிய சஞ்சய்ராம் மற்றும் அவரது பெற்றோா் வினோத்குமாா், விஜயலட்சுமி ஆகியோருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளித் தாளாளா் என். மோகன்ராஜ், பொருளாளா் செந்தில்குமாா், பள்ளி முதல்வா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.