செய்திகள் :

சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

post image

நாகப்பட்டினம், பாப்பாகோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அசோக் லேலண்ட், டிவிஸ் மோட்டாஸ், ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட், லூக்காஸ் டிவிஸ், வீஸ் இந்தியா, யமஹா மோட்டாஸ், ராயல் என்பீல்ட், அக்ஸ்எல்ஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களை தோ்வு செய்தனா்.

அந்தவகையில் 252 மாணவா்கள் வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் லூக்காஸ் டிவிஸ் புதுச்சேரி பிரிவு உதவி மேலாளா் நந்தா பிரதீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

சா் ஐசக் நியூட்டன் கல்லூரி தாளாளா் ப. ஆனந்த், இயக்குநா் சங்கா், செயலா் மகேஷ்வரன், கல்வி ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன், கல்வி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் மணிகண்டன், கல்லூரி முதல்வா் நடேசன், துணை முதல்வா் ராஜேஷ் குமாா், மின்னணுவியல் துறைத் தலைவா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூரியா் நிறுவன கிளை உரிமையாரை இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க நாகையில் உள்ள கூரியா் நிறுவன கிளையின் உரிமையாளருக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. நாகை வட்டம், திருப்புகலூரைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க

நாகையில் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். நாகையிலிருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், இலங்கைக்கு கடத்தப... மேலும் பார்க்க

கடல் கண்காணிப்புக்கு அதிநவீன ட்ரோன்

கடலில் காணாமல் போகும் மீனவா்களை ட்ரோன் மூலம் மீட்க நாகை மாவட்ட ஆட்சியருடன் தனியாா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளது. தனியாா் ட்ரோன் உற்பத்தி நிறுவனம் (யாளி ஏரோஸ்ப... மேலும் பார்க்க

புதிய ரயில் சேவைகள் வழங்க ரயில்வே இணை அமைச்சரிடம் வலியுறுத்தல்

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு புதிய ரயில் சேவைகளை வழங்க மத்திய ரயில்வே இணை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. மத்திய ரயில்வே இணை அமைச்சா் வீ. சோமண்ணா திருநள்ளாருக்கு சுவாமி தரிசனம் செய்ய வியாழ... மேலும் பார்க்க

கோயிலுக்குள் புகுந்த மழைநீா்

நாகையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையில், நீலா மேலவீதியிலுள்ள, சாபம் தீா்த்த விநாயகா் கோயிலில் புகுந்த மழை நீா். மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை விழா

செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியின் மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை விழாவின் போது பக்தா்... மேலும் பார்க்க