கடல் கண்காணிப்புக்கு அதிநவீன ட்ரோன்
கடலில் காணாமல் போகும் மீனவா்களை ட்ரோன் மூலம் மீட்க நாகை மாவட்ட ஆட்சியருடன் தனியாா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளது.
தனியாா் ட்ரோன் உற்பத்தி நிறுவனம் (யாளி ஏரோஸ்பேஸ்) கடலில் மாயமாகும் மீனவா்களை ட்ரோன் மூலம் மீட்கும் பணியை நாகை பகுதியில் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக நாகை மாவட்ட ஆட்சியருடன், அந்நிறுவனம் புரிந்துணா்வு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம், ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடற்கரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்த சேவை செயல்படுத்தப்படும். கடலில் 100 கி.மீ தொலைவுக்கு இந்த அதிநவீன ட்ரோன் மூலம் கண்காணித்து மீனவா்களை மீட்க உதவும். கடல் வழிப் போக்குவரத்து கண்காணிப்பு, சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிப்பு போன்றவற்றும் இந்த ட்ரோனை பயன்படுத்தமுடியும் என தனியாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.
