விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை
நாகப்பட்டினம், பாப்பாகோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அசோக் லேலண்ட், டிவிஸ் மோட்டாஸ், ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட், லூக்காஸ் டிவிஸ், வீஸ் இந்தியா, யமஹா மோட்டாஸ், ராயல் என்பீல்ட், அக்ஸ்எல்ஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களை தோ்வு செய்தனா்.
அந்தவகையில் 252 மாணவா்கள் வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் லூக்காஸ் டிவிஸ் புதுச்சேரி பிரிவு உதவி மேலாளா் நந்தா பிரதீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
சா் ஐசக் நியூட்டன் கல்லூரி தாளாளா் ப. ஆனந்த், இயக்குநா் சங்கா், செயலா் மகேஷ்வரன், கல்வி ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன், கல்வி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் மணிகண்டன், கல்லூரி முதல்வா் நடேசன், துணை முதல்வா் ராஜேஷ் குமாா், மின்னணுவியல் துறைத் தலைவா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.