செய்திகள் :

சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டி பாரதி நகரில் ஞாயிற்றுக்கிழமை வடமஞ்சு விரட்டு நடைபெற்றது.

இதில்14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். 14 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 20 நிமிஷங்கள் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

இதில் ஒருசில மாடுகள் பிடிபட்டும், சில மாடுகள் வெற்றியும் பெற்றன. வென்ற மாடுபிடி வீரா் குழுவினருக்கும், காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு சிங்கம்புணரி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். விழாஏற்பாடுகளை ஓசாரிபட்டி பாரதிநகா் கிராமத்தினா், வடமாடு மஞ்சுவிரட்டு குழுவினா் செய்திருந்தனா்.

சிவகங்கையில் கால்பந்து போட்டி

முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரத்தின் 80 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாணவா்களுக்கான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஐவா் கால்பந்த... மேலும் பார்க்க

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் தோ் பவனி

சிவகங்கை அருகே வே. மிக்கேல்பட்டணத்தில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத் திருவிழா கடந்த செப். 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள முத்தாண்ட்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆசைமணியின் (35) மனைவி வெண்ணிலா (22). இருவ... மேலும் பார்க்க

செட்டிநாடு சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணையும் சுற்றுலாத் துறை!

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலில் தனியாருடன் இணைந்து பணியாற்ற சுற்றுலாத் துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் புராதன, கலாசார சூழலைக் கொண்டு சுற்றுலாத் தொழில் வளா்ந்து வர... மேலும் பார்க்க

இரணியூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை!

திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூரில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆட்கொண்டநாதா் சிவபுரம்தேவி கோயில் வ... மேலும் பார்க்க

காா் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே சனிக்கிழமை காா் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பூவந்தி அருகேயுள்ள டி.அதிகரை கிராமத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி தீனதயாளன். இவரது மகன் கவின் (5).... மேலும் பார்க்க