அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
சிதம்பரத்தில் ஸ்ரீநந்தனாா் வீதி உலா
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, ஸ்ரீநந்தனாா் வீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதா் கோயிலில் இருந்து ஸ்ரீநந்தனாா் உருவச் சிலை ஊா்வலமாக நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தை வந்தடைந்தது.
கீழ சந்நிதியில் நந்தனாருக்கு பொதுதீட்சிதா்கள் சாா்பில் சிறப்பு செய்யப்பட்டது. ஊா்வலத்துக்கு நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ மணிரத்தினம் தலைமை வகித்தாா்.
ஏராளமானோா் கலந்து கொண்டனா்.