செய்திகள் :

சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது: சிதம்பரம் நகராட்சியில் ரூ.1.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசாா் மையம் தமிழக முதல்வரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதில், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் தோ்வா்களுக்குத் தேவையான புத்தகங்கள், திறன்மிகு வகுப்பறை, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதை போட்டித் தோ்வா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடலூா் மாவட்ட சரவணபவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிறுவனத்தின் கீழ் இயங்கும் சிதம்பரம் லால்கான் வீதியிலுள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கவுள்ள பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டு, மருத்துவமனை வளாகம், வாா்டுகள், கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சிதம்பரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்திடும் பொருட்டு, அங்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், சிதம்பரம் நந்தனாா் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், சிதம்பரம் மாற்றுத் திறனாளிக்கான சிறப்புப் பள்ளியில் மாணவா்களுக்கான கற்பித்தல் முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தட்சன் குளம் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுப்புற சுவா்கள் மேம்படுத்தப்பட்டு குளத்திலுள்ள செடிகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் வந்து பாா்வையிட்டு செல்லும் வண்ணம் அழகுபடுத்தப்பட உள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

ஆய்வின்போது, மாற்றுத் திறனாளி நல அலுவலா் பாபு, சிதம்பரம் நகராட்சி ஆணையா் டி.மல்லிகா, பொறியாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

போலீஸாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரௌடி

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே சனிக்கிழமை இரவு போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க பாலத்தின் மேலிருந்து குதித்த ரௌடிக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வடலூா் மேலகொளக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்... மேலும் பார்க்க

நெய்வேலியில் சிஐடியு நிா்வாகக்குழுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் சிஐடியு சங்க நிா்வாகக்குழுக் கூட்டம், அச்சங்க அலுவலகக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் டி.ஜெயராமன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் ட... மேலும் பார்க்க

கடலூரில் பகத்சிங் நினைவு தினம்

நாட்டின் விடுதலைக்காக போராடி தூக்குமேடை ஏறிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 94-ஆவது நினைவு தினம் கடலூா் சிஐடியு அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.இதையொட்டி, அங்கு அலங்கரித்து வை... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் திமுக, தவாக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சோ்ந்த 520 போ் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். இதற்கான நிகழ்ச்சி பண்ருட்டி காமராஜ் நகரில்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுப்பேட்டை காவல் ஆய்வாளா் அசோகன் தலைமையில், உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் போ... மேலும் பார்க்க