தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
சித்திரை திருவிழா ஆலோசனைக் கூட்டம்
ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும். இதன்படி இந்த ஆண்டு வருகிற மே 1--ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மே 10-ஆம் தேதி பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி இந்தத் திருவிழாவுக்கான ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கு கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரவி ராஜா தலைமை வகித்தாா். இதில் அனைத்து சமுதாய மண்டகப்படித்தாரா்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனா். திருவிழா காலங்களில் மண்டகப்படிதாரா்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிறகு அம்மன் வீதி உலா செல்லும் பாதை, ஒப்படைக்கும் நேரம் குறித்து ஆலோசித்து ஒப்புதல் பெறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.